காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வி.
வி.ரி. சகாதேவராஜா-
இன்றைய இறுக்கமான காலகட்டத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கின்றது . ஆம் அநியாயம், அடாவடித்தனம், அதர்மம் ,அயோக்கியத்தனம் அழிந்திருக்கின்றது. பாராட்டுகின்றோம், வாழ்த்துகின்றோம். அதேவேளை, இதே நாட்டில் பிறந்து பல்வேறு சொல்லொணா துன்ப துயரங்களை அனுபவித்த தமிழர்களின் நீண்ட கால உரிமைக் குரலுக்கு நீதி கிடைக்குமா?
இவ்வாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் சமகால அரசியல் நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்..
நாங்கள் எங்களுடைய இன விடுதலைக்காகவும், நில விடுதலைக்காகவும் ஜனநாயக ரீதியாக இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
எமது இந்த அவல குரலும் ,இந்த கூக்குரலும் வருகின்ற அரசாங்கத்திற்காவது கேட்குமா? என்கின்ற கேள்வி எங்களிடம் எழும்புகின்றது.
உங்களுடைய ஜனநாயக போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவையும் தந்திருக்கின்றோம். தொடர்ச்சியாக நாங்கள் பெரும்பான்மை இனத்தவர்களோடு வாழ தயாராக இருக்கின்றோம்.
நாங்கள் தனி நாடு அல்லது இலங்கை ஆட்சி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை.
இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சுய உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டும், .இங்கு கல்வி கற்று படிக்கின்ற ஒவ்வொரு இளைஞர்களும் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உட்பட அனைத்திலும் இனிவரும் காலங்களும் புறக்கணிப்பில்லாமல் எங்களை ஏனைய மனிதர்கள் போன்று நடத்த கொள்ளக்கூடிய ஒரு அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றார்.
மேலும் அவர் கூறுகையில்..
இலங்கையில் வாழ்கின்ற மூவின மக்களும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி தூரநோக்கு இல்லாத சிந்தனையில் செயல்பட்ட அரசாங்கத்தை அண்மைய போராட்டம் வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றது.
ஜனநாயக ரீதியான போராட்டத்தை கடந்த பல வருட காலங்களாக தமிழ் மக்கள் அறவழியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் .இதே பொருளாதார நெருக்கடி, இதே எரிபொருள் தட்டுப்பாடு ,உணவு தட்டுப்பாடு இவ்வாறான தட்டுப்பாடுகளோடு பல ஜனநாயக போராட்டங்களை போராடிக் கொண்டு பல உயர்த்தியாகங்கள் உடமை தியாகங்கள் பல பொருள்கள் உடமைகள் அனைத்தும் இழந்த நிலையில் பல வருட காலமாக அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்த இலங்கை திருநாட்டில் நாங்களும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஐக்கிய நாடுகளுக்கும் பல விடயங்களை கொண்டு சென்றிருக்கின்றோம்..
இன்று நம் இனத்தவரின் மீது இரக்கம் காட்டாமல் இருப்பது ஏன் ?
இனி வருகின்ற அரசாங்கம் அல்லது அரசியல் பிரமுகர்கள் தமிழர்கள் மீதான இரக்கம் காட்டுவார்களா?
நாங்களும் இந்த நாட்டில் பிறந்த மக்கள் என்பதை ஏற்பார்களா? அல்லது இந்த ஜனாதிபதி தெரிவாகி வந்த உடனே சிறுபான்மை இனத்தவர்கள் உங்களுடைய வாக்கு பலமோ அல்லது அவர்களுடைய அங்கத்துவமோ எங்களுக்கு தேவை இல்லை என்று சொன்னதைப் போன்று, தலைகுத்துக்கரணம் அடிப்பார்களா என்று தெரியவில்லை.
இந்த நாட்டிலே குறிப்பாக பெரும்பான்மை இனத்தவர் மூலம் சாதித்துக் காட்டலாம் என்று பல விடயங்களை தவறு தவறாக அவர் கூறினார் .
சாணக்கிய தலைமைகள் அன்றே சொன்னது 'சிங்கள மக்களே சிங்கள இனவாதிகளுக்கு எதிராக இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஒரு நாள் வீதிக்கு வந்து போராட தொடங்குவார்கள் "என்று சொன்ன வார்த்தை இன்று நடந்தேறி இருக்கின்றது..

0 comments :
Post a Comment