விவாகரத்து!



வாழ்க்கையைில் ஒர் புரிந்துணா்வு விட்டுக்கொடுப்பு சுதந்திரம் வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது

இப்போது மிகக் கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும ; பெண்களுக்கு விவாகரத்து தேவையே. அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் அன்பில் இசைநது செல்ல வேண்டிய விடயங்களுக்கு கூட ஈகோ பாரத்துக் கொண்டும்.
குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற கேவலமான ஆலோசனைகள்

ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்லக் காரணமாகி விடுகிறது. ஆணைச்சார்ந்து பெண் வாழும் சூழலும் இப்போது இல்லை. இது மிகப் பெரிய காரணம் எனலாம்.
உனக்கு என்ன கை நிறையச் சம்பாதிக்கின்றாய் உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே தைரியமாய் முடிவெடு என்றுக் கேவலமான ஆலோசனைகள் அதிகம் கொடுத்துக் கெண்டிருக்கிறார்கள். பணம் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது.

உங்களுக்கு வேறு ஒரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறு ஒரு மணைவி கிடைக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சியம் கிடைக்க மாட்டார்கள்.
பார்ன் சுவோலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ..கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில ; இருந்து கலிபோர்னியாவுக்கு வந்துப் போக பறந்து செல்லும் 16600 கி.மீ. துரத்தில் எங்கும் நிலப்பரப்போ மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில்
இருந்து புறப்படும் போது சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன.

ஏப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து அலகில் கவ்வியக் குச்சியைக்கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்றுக் கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து
வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலில் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும்.
ஒரு நல்வாழ்வை தன் குங்சுகளுக்குக் கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது.பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.
சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும் சகிப்பத்தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந ;த வாழ்வைத் தொடருகிறோம் என்றுக் கசப்புடனும் இருக்கும் தம்பதியினர்

அனைவருமே இந்தப்பறவையின் பயனத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.தன் இனத்தை நல்ல விதமாக உருவாக்குவதில் இத்தனைப் போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக் காட்டிலும் அதிகப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும ;.
சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்

ஆணாதிக்கம் மிகுந்த ஆண் வர்க்கம ; என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்தருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுநத ஆண்வர்க்கம ; தானே.மாற்றப்பட வேண்டியது மனங்களே. எதையும் எதிர்க்கொள்ளும் தைரியம் தான்.

தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்? அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?

அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம். பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியம ; தான்.
மேலை நாடுகள் போல ; சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள காட்டிக்கொண்டிருக்க இயலாது. குடும்ப அமைப்பினைத் தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவர்அவர்

குடும்பத்தில் மட்டுமே சாத்தியப்படும் என்ற உண்மையை உணர்ந்து ‘ஒரே பெற்றோர்’ என்ற வாழ்வைப் பிள்ளைகளுக்கு கொடுக்கத்துவங்கி இருக்கிறார்கள். இங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

ஆனம் காப்பதில் துனையைத் தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுயப்பரிசோதனை செய்து கொள்வோம்! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும்

இடத்திலேயே உருவாக்கிக்கொளளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும“; தானே... இது தாங்க உண்மை
திருமண வாழ்க்கையின் பினைப்பு ஒரு சூனியமாக மாறுவதற்கு பணம் என்னும் பேரொழி ழூலக்காரணமாகக் கூடாது. ஒரு வாழ்க்கையின் குடும்பம் எனும் கட்டமைப்பு அழகாக காட்சி அளிக்குமாயின் அது ஒரு அழகிய தேசமாக மாறுவதற்கு எத்தனை சிறமங்களை முன்னெடுக்க வேண்டும்.

எனது வேண்டுகோள் பெண்களுக்கே குடும்பத்தின் தலைவி ஆளுமை பொருந்தியவள் ஆளுமை நாங்கள ; தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் எமது தியாகமே ஒரு வாழ்க்கையின் அன்பின் அத்திரமாக மாறுகின்றது எனவே ஒவ்வொரு விஷயத்திலும் எமது துனையின் அமைப்புக்கு ஏற்ப வாழ்வோமாயின் செலிப்பான வாழ்க்கை ஒன்றை வெண்றெடுக்கலாம். சிந்தியுங்கள்..... சிறு சிறு பிணக்குகளுககாக நாம் விவகாரத்திற்காக நீதிமன்றத்தை நோக்கி ஓடுகின்றோம். சந்தேகம், ஈகோ, தனது ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியினால் சந்தேகம்....யாருடன் இவா் இவள் பேசுகின்றாா். பேசுகிறாள் சட் பன்னுகிறாள் எனச் சந்தேகம் இந்த கையடக்க ஸ்மாட்போன் காரணமாகவே பல திருமணங்கள் பிரிந்துள்ளன.


ஆக்கம் பர்ஹானா கபூர்
உளவியல் குடும்ப ஆலோசகா
சேப் கவுன்சிலிங் நிலையம்
களுபோவிலதெஹிவளை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :