கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் அடிப்படை வசதிகள் இல்லையென்று விளையாட்டு வீரர்களும் பொது மக்களும் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த விளையாட்டு மைதானத்தை பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு கழக வீரர்களும் பாடசாலை மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தோடு, இவ் விளையாட்டு மைதானத்தில் வெளியூர்களைச் சேர்ந்த வீரர்களும் சுற்றுத் தொடர்களில் பங்கேற்று வருகின்றனர்.
இவ்வாறு குறித்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர்.
அதேபோன்று, அங்குள்ள மலசல கூடம் பாவனையற்ற நிலையில் காணப்படுவதுடன், மலசல கூடத்தினுள் மீன் பிடிக்கும் வலைகள் வைக்கும் களஞ்சியமாகவும் மாறியுள்ளது.
அத்துடன், குறித்த மைதானத்தில் அண்மைக் காலமாக எரிவாயு சிலண்டர்கள் வழங்கப்பட்டு வருவதால் பொதுக்கள் இரவு, பகலாக மைதானத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், மைதானத்தில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் சிலிண்டர்கள் திருடப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் இவ்விடயம் தொடர்பாக கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment