பாதுகாப்பு அமைச்சின் முய‌ற்சியை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி, (உல‌மா க‌ட்சி) பெரிதும் வ‌ர‌வேற்றுள்ள‌துக‌ட்டார் அற‌க்க‌ட்ட‌ளை மீதான‌ இல‌ங்கையின் த‌டையை நீக்குவ‌த‌ற்கான‌ பாதுகாப்பு அமைச்சின் முய‌ற்சியை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி, (உல‌மா க‌ட்சி) பெரிதும் வ‌ர‌வேற்றுள்ள‌துட‌ன் இது ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ம‌ற்றும் பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ அர‌சாங்க‌த்தின் மிக‌ச்சிற‌ந்த‌ ந‌ட‌வ‌டிக்கையாகும் என‌வும் தெரிவித்துள்ள‌து.
இதுப‌ற்றி இல‌ங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ள‌ க‌டித‌த்தில் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து,
2019ம் ஆண்டு ஸ‌ஹ்ரான் என்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாதியின் அப்பாவிக‌ள் மீதான‌ குண்டு வெடிப்பின் கார‌ண‌மாக‌ அப்போதிருந்த‌ அர‌சாங்க‌ம் அப்பாவி முஸ்லிம்க‌ள் மீதும், ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கு கொஞ்ச‌மும் துணை போகாத‌ முஸ்லிம் அமைப்புக்க‌ள் மீதும் ச‌ட்ட‌த்தை பாவித்த‌து.
சுமார் மூவாயிர‌த்துக்கு அதிக‌மான‌ முஸ்லிம்க‌ள் எழுந்த‌மான‌மாக‌ கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ திணைக்க‌ள‌த்தில் ப‌திவு பெற்றிருந்த‌ 600க்கு மேற்ப‌ட்ட‌ முஸ்லிம் ந‌ல‌ன்புரி அமைக்க‌ள் ச‌ரியான‌ விசார‌ணை இன்றி த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌.
அதே போல் இல‌ங்கையில் இன‌ ந‌த‌ பேத‌ம் இன்றி ஏழைக‌ளுக்கு உத‌வி செய்த‌ க‌ட்டார் அற‌க்க‌ட்ட‌ளையும் எந்த‌ வித‌ நியாய‌மான‌ விசார‌ணையும் இன்றி ஒரு சில‌ முஸ்லிம் பெய‌ர் தாங்கிக‌ளின் விருப்ப‌த்துக்க‌மைய‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இத்த‌னைக்கும் க‌ட்டார் அற‌க்க‌ட்ட‌ளை நிறுவ‌ன‌ம் யாருக்காவ‌து உத‌வி செய்வ‌தாயின் மிக‌க்க‌டுமையான‌ நிப‌ந்த‌னைக‌ள், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ரின் நாட்டின் அனும‌தி போன்ற‌வை பெற்ற‌பின்பே உத‌வி செய்யும். இது கார‌ண‌மாக‌ இல‌ங்கைக்கு மில்லிய‌ன் க‌ண‌க்கில் டொல‌ர்க‌ள் வ‌ங்கிக‌ள் ஊடாக‌ வ‌ந்த‌து.
இவ்வாறு முஸ்லிம் நாடுக‌ளின் அற‌க்க‌ட்ட‌ளைக‌ள் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌தும் ந‌ம‌து நாட்டின் அந்நிய‌ செலாவ‌ணிக்கு ஏற்ப‌ட்ட‌ தாக்க‌மாகும்.
ந‌ல்லாட்சிக்கு பின் வ‌ந்த‌ ஆட்சியில் இது விட‌ய‌ங்க‌ள் மாறி இன‌வாத‌ம் இல்லாத‌ அர‌சாங்க‌ம் அமையும் என்று எதிர் பார்த்தோம். ஆனால் அந்த‌ அர‌சும் ந‌ல்லாட்சி போன்றே முஸ்லிம்க‌ள் விட‌ய‌டத்தில் தொட‌ர்ச்சியாக‌ பிழை விட்டு இன்று இல‌ங்கை என்ப‌து முஸ்லிம் நாடுக‌ளின் செல்ல‌ப்பிள்ளை என்ப‌திலிருந்து மாறி இல‌ங்கை மிக‌ மோச‌மான‌ இன‌வாத‌ நாடு என்ற‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.
ஆக‌வே க‌ட்டார் அற‌க்க‌ட்ட‌ளை மீதான‌ த‌டையை நீக்க‌ எடுக்கும் பாதுகாப்பு அமைச்சின் ந‌ட‌வ‌டிக்கை வெற்றியாக‌ அமைந்து ந‌ம‌து நாடு முன்ன‌ர் போன்று அர‌பு நாடுக‌ளின் உற்ற‌ ந‌ட்பு நாடாக‌ மாற‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) பிரார்த்திக்கிற‌து.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :