மாளிகைக்காடு, சாய்ந்தமருதில் மகிழ்ச்சியாக அதிகாலையில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை !



நூருல் ஹுதா உமர்-
தியாகத்தை போதிக்கும் புனித ஹஜ்ஜுப்பெருநாளை நாட்டின் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் சுகாதார வழிமுறைகளை பேணி அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் இன்று கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது அல்- அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அப்துல் ஜப்பார் நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது அப்பிள் தோட்ட திடலில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி எம்..எஸ்.எம். ஸாதிக் (ஸலபி) நிகழ்த்தினார்.

பொருளாதார தடைகள், கஷ்டங்கள்,நெருக்கடிகள் நீங்கி நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஓங்க துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் முஸ்லிங்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் தொழுகையில் ஈடுபட்டிருந்ததுடன், தொழுகை முடிந்தவுடன் தமது அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். மரணித்த உறவுகளுக்காக அவர்களின் குடும்ப உறுப்பினர்களினால் மையவாடிகளில் துஆ பிராத்தனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :