பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் சற்று முன்னர் போராட்டக்காரர்களினால் சுற்றி வளைக்கப்பட்டு சுக்குநூறாகத்தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது
பிரதமரின் முக்கிய அதிகாரியொருவருடன் உரையாடிய போது வீட்டிற்குள் தொடர்ந்தும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ( ரணிலின் மனைவி) தங்கியிருப்பதை உறுதிப்படுத்தினார்
பேராசிரியர் மைத்திரி கடுமையான நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவர் தனது வீட்டு பணியாளர்களுடன் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்
சம்பவம் குறித்து கேள்வியுற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது அவ்விடத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக கேள்வி. இரவு நேர பறப்புக்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்த முடியாத நிலையில் பெரும்பாலும் சிறிய ரக விமானம் ஒன்றின் மூலமாக அவர் கொழும்பை வந்தடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க எந்த ஆபத்துக்களும் நேராமல் பாதுகாக்கப்பட வேண்டும். பிரதமரின் மனைவியாக இருந்த போதும் என்றைக்கும் அவர் அகங்காரத்துடன் நடந்து கொள்ளாத
அருமையான பெண்மணி. அவருக்காக மனம் பிரார்த்தித்துக் கொள்கின்றது.


0 comments :
Post a Comment