கனேடிய உயர்ஸ்தானிகரின் கனேடிய தின செய்தி!



னடா தின வாழ்த்துக்கள். இன்று கனேடியர்கள் ஒன்றாக எமது நாட்டின் சாதனைகளைக் கொண்டாடுவதுடன், அவ்வாறு செய்வதில் ஒரு மகிழ்ச்சி உள்ளதாக நம்புகின்றோம். ஒரு சிறந்த கனடாவைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதால் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் நாம் சிந்திக்கின்றோம்.
கனடா தினமானது, வகைமாதிரியாக குடும்பம், நண்பர்கள் மற்றும் சன சமூகத்தில் கவனம் குவிப்பதுடன், முறைசார் ரீதியாகக் கொண்டாடப்படுகிறது. கனேடியர்களின் அனைத்தையும் உள்ளடக்கிய தேசியவாத உணர்வை இது பிரதிபலிக்கின்றது. அவர்களது தனிப்பட்ட அடையாளங்களின், பல்வகையான பிரஜாநிலைகளை பல்வேறுபட்ட படைகளை மப்பிள் (maple) இலையின்கீழ் கனேடியர்களாக அனைவரையும் ஒன்றுசேர்க்கும் உணர்வுக்குள்ளான ஒருங்கிணைப்பை இயலச் செய்கிறது.

கொள்ளைநோயின் கொடுமையான கட்டமானது, நன்றிக்குரிய முறையில் எங்களுக்குப் பின்னால் சென்றுவிட்ட அதேவேளையில், உலகமானது எமது பதிற்செயற்பாட்டில் எம்மையெல்லாம் ஒன்றாக மீண்டும் பணியாற்ற கேட்டுநிற்கும் வேறுபட்ட சிக்கலான சவால்களை உலகம் எதிர்கொள்கிறது. உலகளாவிய விளைவுகளின் பெரிய நெருக்கடிகள் உலகத்தைச் சூழ எழுந்துள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்கமுறையில் உக்ரைன் மீதான ரஸ்யப் படையெடுப்பு உள்ளது.
இலங்கையில், இந்த புறத்தாக்கங்களினால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது. பெருந்தொற்றின் போதும், சுமார் கடந்த 70 ஆண்டுகளாகவும் நாம் செய்தததைப் போன்றே, இந்த நெருக்கடி நேரத்திலும் கனேடியர்கள் தனது ஆதரவை வழங்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களின் கொள்வனவிற்கான நிதியினை நாம் வழங்குகின்றோம். தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சிக்கு உடனடியாக தேவையாகவுள்ள அரிசியினை கொள்வனவு செய்வதற்கு உலக உணவுத் திட்டத்துடனும் கனடா பணியாற்றுகின்றது. நெருக்கடி அதிகரிக்கின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு/செம்பிறைச் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.
இந்த சவால்மிக்க நேரங்களை ஒரு மிகவும் நிலையான, வளமான அத்துடன் இந்தக் குறிப்பிடத்தக்க நாட்டினதும், அதன் ஆற்றலுடைய மக்களினதும் பெரும் இயலுமையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு அனைத்துமடங்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக்குவதற்கான பல இலங்கையர்களின் விசேட ஆர்வத்தை நான் பாராட்டுகின்றேன். பல்வேறுபட்ட நிலைமைகளின் பொழுதும்கூட கனடாவில் நாம்கூட இது தொடர்பான ஒரு சட்டவாக்கத்தை அங்கீகரித்து முடிவுக்குக் கொண்டுவருதல் உட்பட சுதேசிய மக்களுடனான மீளிணக்கத்தை முன்கொண்டு செல்வதனால் எல்லோருக்குமான ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாமும் உழைக்கின்றோம். உலகம் முழுதிலும் இருந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புலம்பெயர்வாளர்களைத் தொடர்ந்து வரவேற்றுக்கொண்டிருந்த பொழுதிலும் எமது அழகான நாட்டின் பூர்வகுடிகளின் வழித்தோன்றல்களை ஏற்றுக்கொண்டு கனேடிய சமூகத்தில் முழுமையாகக் கொண்டாடுவதை நிச்சயப்படுத்த நாம் விரும்புகின்றோம். இதனோடு தொடர்புட்ட வகையில் கனடா இலங்கையின் மீளிணக்கச் செயன்முறைக்கு ஆதரவளிப்பதுடன், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சன சமூகங்களாகிய யாருடைய ஒருங்கிணைப்பு நாட்டின் வெற்றிக்கு அவசியமானதோ அவர்களின் வலுவூட்டலுக்கும் ஆதரவளிக்கின்றது. இது பலமான மக்களிடையிலான இணைப்பையும், நீண்ட பொருளாதாரப் பிணைப்பையும் கட்டியெழுப்புகின்றது.

உலகம் எதிர்கொண்டிருக்கும் பல சவால்களினிடையே அவற்றிலெல்லாம் மிகவும் ஆழமான ஒன்றை நாம் மறந்துவிட முடியாது. காலநிலை மாற்றம். காலநிலை மற்றும் சுற்றாடல் செயற்பாடானது, கனடாவுக்கு ஒரு முன்னுரிமையான விடயமாகத் தொடர்ந்துள்ளதுடன், நாம் உலகளாவிய சுற்றாடல் வசதிப்படுத்தல் மற்றும் பசுமைக் காலநிலை நிதியம் ஆகிய இலங்கைக்கு வசதியளிப்பவர்களுக்கு நாம் தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்றோம். அண்மைய ஆண்டுகளில் ஒரு உள்ளுர் சுற்றாடல் முனைப்புக்காக நாம் எமது ஆதரவை அதிகரித்துள்ளோம்.

கனடாவை வடிவமைப்பதிலும், முன்னேற்றுவதிலும் தொடர்ந்து செயற்படும் இலங்கைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பல கனேடியர்கள் பற்றி ஒரு குறிப்புடன் முடிக்காவிடில் அது ஒரு பெரிய கவனக்குறைவாக இருக்கும். பல்வகைத் தன்மை, ஐக்கியம் என்பவற்றுக்கான ஒரு தினமாக ஏன் நாம் கனடா நாளைக் கொண்டாடுகின்றோம் என அவர்கள் சான்று காட்டுவர். இன்னும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு எதிர்காலத்திற்காக நாம் நம்பியிருப்போமாக.
கனடா தின வாழ்த்துக்கள்!

டேவிட் மெக்கினொன்
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :