வடக்கு, கிழக்கு பகுதிகளில் 95% ஆன நிலப் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
முனீரா அபூபக்கர்-
டக்கு கிழக்கு பகுதிகளில் 95% ஆன நிலப் பகுதிகளில் கண்னிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய கண்ணிவெடிகள் பற்றிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இன்னும் 14 சதுர கிலோ மீற்றர் நிலப் பகுதி மாத்திரமே மீதமாக இருக்கிறது. 2028 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நிலக் கண்ணிவெடி அற்ற நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் இலக்காகும்.

இலங்கையில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றுவது சம்பந்தமாக தெளிவூட்டுவதற்கான நிகழ்வு ஒன்றில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. குறித்த நிகழ்வு கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நேற்று நேற்று நடைபெற்றது.
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்தி இலங்கையை கண்ணிவெடிகள்.அற்ற நாடாக விரைவில் மாற்றும் வகையில் தற்போது பெறப்படும் உதவித் தொகயை 21 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஜெனீவாவில் உள்ள சர்வதேச நிலக் கண்ணிவெடிகள் அகற்றுவதற்கான நிலையம் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகின்றது.
புலிப் பயங்கரவாதம் இருந்த காலப் பகுதிகளில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் பரவலாக புதைக்கப்பட்டிருந்ததோடு 2009 ஆம் அண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அந்த நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது அது தேசிய நிலக் கண்ணிவெடிகள் தொடர்பான செயற்பாட்டு மத்திய நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அந்த மத்திய நிலையம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் விடயப் பரப்புக்குள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நிலக் கண்ணிவெடி அகற்றப்படும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற எல்லா அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டல் இந்த மத்திய நிலையத்தில் இருந்து செய்யப்படுகின்றது.
இலங்கையில் நிலக் கண்ணிவெடி அகற்றும் செயற்திட்டத்திற்காக இலங்கை இராணுவம் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றது. அதற்கு மேலதிகமாக மெக் நிறுவனம், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம், டேஸ் நிறுவனம் மற்றும் ஷாப் நிறுவனம் ஆகியன சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் நான்கும் அதற்கான பங்களிப்பை வழங்குகின்றன.

வருடாந்தம் 17 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை கிடைக்கிறது. நிலக் கண்ணிவெடி அகற்றும் செயர்பாட்டில் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற 300 க்கும் மேற்பட்ட சிவில் பொதுமக்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டிலே முழுமையாகத் தங்கி வாழ்கின்ற 12000 பேருக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலக் கண்ணிவெடிகள் தடை செய்யும் உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளது. அதன் படி அதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலின் கீழ் 2022 பெப்ரவரி 17 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தால் அது குறித்த சட்ட மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்த செயலமர்வுக்கு தேசிய நிலக் கண்ணிவெடிகள் பற்றிய செயற்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் வீ. பிரேமசந்திரன் உட்பட பெருமளவிலான இராணுவ அதிகாரிகள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :