9ம் திகதி தோட்டங்கள், வர்த்தகங்கள், அலுவலகங்கள் பணிபகிஷ்கரிப்பில் “கோதா-நீ-போப்பா” போராட்டம்!



<எதிரணி, காலிமுக போராட்டக்குழுக்கள் இணக்கப்பாடு-மனோ கணேசன்>

9ம் திகதி சனிகிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்கட்சிகள், காலிமுக போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,

9ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக பங்கு பெறும். இதன்படி மலையக தோட்டங்களில் அன்றைய தினம் பணிகளில் ஈடுபடாமல், அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படி மலையக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட வதிவாளர்களை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம்.

அதேபோல கொழும்பு உட்பட நகரங்களில் வர்த்தக நிலையங்களையும், அலுவலகங்களையும் மூடி, முழுமையாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படியும், தமது வேலைத்தள பணியாளர்களையும், அரசு எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துக்கொள்ள இடமளிக்கும்படியும் அனைத்து தரப்பினரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :