எரிவாயு பெற்றுக்கொள்ள குடும்ப அட்டை அறிமுகம்எச்.எம்.எம்.பர்ஸான்-
பொதுமக்கள் சமயல் எரிவாயு மற்றும் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களும் நாளுக்குநாள் வீதியோரங்களில் எரிவாயுக்காக காத்துக் கிடந்தது ஏமாற்றத்துடன் வீடுகளுக்குச் செல்கின்றனர்.

இவ்வாறான நிலைமையினைக் கருத்திற்கொண்டு பொதுமக்களின் நலன் கருதி ஓட்டமாவடி பிரதேச செயலகம் எரிவாயு சிலின்டர்களை பெற்றுக்கொள்ள குடும்ப விநியோக அட்டை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

கிராம உத்தியோகத்தர் ஊடாக வாக்காளர் இடாப்பின் படி, குடும்பத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் இந்த அட்டையினை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :