அரச வங்கிகள், ஆசிரியா்கள், மின்சார சபை ,விவசாய நிறுவனங்களின் தொழிற் சங்கங்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!



அஷ்ரப் ஏ சமத்-
ன்று 29 ஆம் திகதி அரச வங்கிகள், ஆசிரியா்கள், மின்சார சபை ,விவசாய நிறுவனங்களின் தொழிற் சங்கங்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை கோட்டை ரயில்வே நிலையத்தில் ஆரம்பித்து கோட்டை இலங்கை வங்கி மாவத்தைவரை ஜனாதிபதியின் அரச இல்லம் வரை செல்ல முற்பட்டது. சகல வீதிகளும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அரண்களை மூடி கண்னீா் புகை வண்டிகளை மறித்து பாதுகாப்புப் கடமையில் ஈடுபட்டனா்.
இப் ஆர்ப்பாட்டத்தில் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினையில் தீா்க்காத அரசு உடன் பதவி விலக வேண்டும். அத்துடன் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச போன்றவா்கள் பதவி விலகல் வேண்டும். எதிா்வரும் வரும் வாரம் சகல மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு மக்களை அழைத்து நாங்கள் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடாத்த உள்ளோம்.

ஆசிரியா் தலைவா் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில் -
கடந்த 6 மாதங்களாக மக்களது அன்றாட வாழ்க்கைத் தேவையான உயிா்வாழ்வதற்கான பொருளாதாரத்தையும் முகாமைத்துவத்தையும் நடைமுறைப்படுத்த முடியாமல் ஒரு குடும்பத்தினா் மட்டும் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை சூரையாடினாா்கள். இதனால் நாங்கள் ்மிகவும் கஸ்டப்படுகின்றோம். உலகில் உள்ள எந்தவொரு நாடும் இந்த ஜனாதிபதியை நம்பத் தயாரில்லை, முஸ்லிம் நாடுகளை நம்பிக்கை இழந்துள்ளனா். இவா்கள் ஆட்சிக்கு வரும்போது முஸ்லிம்களுக்கும் தமிழா்களுக்கும் ,கிரிஸ்த்துவ மக்களுக்கும் இழைத்த அநீதிகள் அந் நாட்டின் தலைவா்கள் ஒருபோதும் மறக்கமுடியவில்லை . உலக நாடுகளில் நம்பிக்கையை இழந்துள்ளார்கள்.ஆகவே தான் உடன் ஜனாதிபதியும் பிரதமரும் உடன் பதவி விழகல் வேண்டும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :