கல்முனையில் தமிழ் பிரதேச அரச காணி அபகரிப்பா? பொது மக்கள் ஆர்ப்பாட்டம்! பொலிசார் தலையீட்டால் கலைந்தது.



காரைதீவு சகா-
ல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணியை தனியார் ஒருவர் அத்துமீறி நுழைந்து கட்டுமான வேலைகளை செய்து அபகரிக்கும் முயற்சியை கண்டித்து நேற்று (29) புதன்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.

பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை மகளிர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த அரச காணியில் தனியார் ஒருவர் தனக்கு உரிமை கோரி கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆர்ப்பாட்டத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தற்காலிகமாக கட்டிடம் அமைக்கும் பணியை நிறுத்தியதுடன் நீதிமன்றத்துக்கு குறித்த விடயத்தினை எடுத்து செல்வதாகக் கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என கூறப்படுகிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கல்முனை 01 C பிரிவில் உள்ள குறித்த அரச காணியான இங்கு மழை காலத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும்..
குறித்த காணியில் தனியார் ஒருவர் கட்டிடம் கட்ட முற்பட்ட வேளையில் முன்பும் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லையில் உள்ள காணிகளை அபகரிக்கும் சூழ்ச்சியாகவா காணி அதிகாரம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இருந்து பறிக்கப்படுகிறது.
கல்முனை வடக்கு பிரதேசத்திலுள்ள அரசகாணியை இன்றும் அபகரிக்க முயற்சி – கல்முனை வடக்கு பிரதேச செயலக காணி அதிகாரத்தை பறிக்கும் சூழ்ச்சி இதற்காகவா? என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :