கொழும்பு மத்தி ரோட்டரி கழகத்தினால் Rotary club of Colombo Mid town) சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸ்ம்ஸ் மகா வித்தியாலயத்துக்கு கணினிகள் வழங்கி வைப்பு !



எம்.என்.எம்.அப்ராஸ்-
கொழும்பு மத்தி ரோட்டரி (Rotary club of Colombo Mid town) கழகத்தினரால் கல்முனை கல்வி வலய பிரிவில் உள்ள சாய்ந்தமருது கமு/கமு/ மழ்ஹறுஸ்
ஸ்ம்ஸ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை)
கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விருத்தி செய்யும் முகமாக பாடசாலையின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் ஸ்ம்ஸ் மகா வித்தியாலயத்தின் (தேசியபாடசாலை) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி அவர்களிடம் கொழும்பு மத்தி ரோட்டரி (Rotary club of Colombo Mid town) கழகத்தினரால் 10 கணினிகள் பாடசாலையில் வைத்து இன்று(10) கையளிக்கப்பட்டது.

கொழும்பு மத்தி ரொட்டரி (Rotary club of Colombo Mid town) கழகத்தின் தலைவர் அர்சாட் ஜமால்ட்டீன்,கொழும்பு மத்தி ரொட்டரி கழகத்தின் முன்னாள் தலைவர்களான இம்தியாஸ் இஸ்மாயில், ஜி.எஸ் சில்வெஸ்டர், நுஹ்மான் சிராஜுதின்,அஸ்வான் பங்சஜயா மற்றும் சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள்,என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.
மேலும் மாணவர்களின் நலன் கருதி குறித்த உதவியை செய்தமைக்கு பாடசாலை சமுகம் சார்பில் குறித்த கொழும்பு மத்தி ரொட்டரி கழகத்திருக்கு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி நன்றியினை இதன் போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :