அம்மனின் வெளி வீதி உலா



காரைதீவு சகா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டலாபிசேக பூஜையின் போது தற்சமயம் வெளிவீதி உலா இடம்பெற்று வருகிறது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் தினமும்
இரவு நேரப்பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

அவ்வாலயத்தின் மகாகும்பாபிசேகம் கடந்த 6ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றுமுடிந்து மண்டலாபிசேகப்பூஜைகள் நடைபெற்றுவரும் இந்நாட்களில் பக்தர்கள் அதிகளவில் அங்கு செல்லஆரம்பித்துள்ளனர்.

நேற்று 18வது தின பூஜை.ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகைதந்திருந்தார்கள்.மண்டலாபிசேகபூஜைகள் யாவும் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி நிறைவுற்று 6ஆம் திகதி சங்காபிஷேகத்துடன் கும்பாபிஷேக விழா நிறைவடையவிருக்கிறது என ஆலய அறங்காவலர்சபைத்தலைவர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.

பக்தர்கள் அனைவரும் அன்னதானத்திலும் பூஜையிலும் பங்கேற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

தினமும் இரவு 9 மணிவரை பூஜை இடம்பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :