மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பினால் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ் உமர் மௌலானா, ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஜூனைட் நளீமி, பிரதிக் கல்விப் பணிப்பாளரும், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜூன் நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், எம்.ஏ.ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான ஏ.எல்.சலாம், எம்.பீ.எம்.சித்தீக் மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவரும் சமுகசேவையாளருமான எம்.ஏ.சீ.எம்.நியாஸ், பள்ளிவாயல் நிர்வாகத்தினர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பின் நிதியுதவியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த கட்டடத்தில் ஆசிரியர்களுக்கான பல்தேவை தொகுதி, கலாச்சார மண்டபம், மாணவர்களுக்கான வகுப்பறை தொகுதி ஆகியவை அமைவுள்ளன என்று பாடசாலையின் அதிபர் ஏ.மீரா முகைதீன் தெரிவித்தார்.
பாடசாலைக்கு அவசியத் தேவையாக காணப்பட்ட இவ் கட்டடத் தொகுதி அமைய முயற்சிகளை மேற்கொண்ட ஏ.எல்.ஜுனைத் நளீமி மற்றும் கட்டடம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் பாடசாலை அதிபர் நன்றிகளை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment