பம்பலப்பிட்டி புனித சென் போல் தேவாலயத்தில் இப்தார் நிகழ்வும், நினைவஞ்சலியும்.



சில்மியா யூசுப்-
லங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் மூன்றாம் ஆண்டான ஏப்ரல் 21 நினைவு நாளை முன்னிட்டு வியாழக்கிழமை (21) பம்பலப்பிட்டி புனித சென் போல் தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதலினால் உயிரிழந்த 260 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்பு வழிபாடு ஒன்று நடத்தப்பட்டது.

புனித ரமழான் மாதம் என்பதால், உயிரிழந்தவர்களின் நினைவாக அவர்களுக்காக நினைவஞ்சலியும், கிரிஸ்தவ இஸ்லாமிய உறவுகளுகளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் தேவாலய (Fபாதர்) பாதிரியாரான அன்ட்ரெவ் தேவதாசன் , சமூக செயற்பாட்டாளரான சீரின் சரூர் , ஸ்வஸ்திகா அருலிங்கம் மற்றும் நபீலா இக்பால் பெண்கள் அமைப்பின் உறுப்பினரான அனீஸா பிர்தவ்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ,பயங்கரவாத தடுப்புச்சட்ட காவலில் வைக்கப்பட்டு விடுதலையாகி வந்த அப்பாவி பெண்களும் இன்னும் தொடர்ச்சியாக 03 வருடகாலமாக எவ்வித விசாரணையும் இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இதில் கலந்து கொண்டதோடு
அவர்களின் அனுபவங்களும் இந் நிகழ்வின் போது பகிரப்பட்டன.

யுத்ததிற்கு பின்னர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை பாவித்து அதிகளவில் நபர்களை கைது செய்யப்பட்டதும் ,பெரும்பாலான பெண்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :