"புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும்."-நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத்


நெடுஞ்சாலைகள் அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத், நாட்டில் இது போன்ற ஒரு முக்கியமான தருணத்தில் நெடுஞ்சாலைகள் போன்ற பாரிய அமைச்சுப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தமைக்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். .

இன்று (04/18) பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள மக நெகும மஹமெதுர வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

"எமது வரலாற்றில் முதல் முறையாக, நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், ஒரு அரசாங்கமாக நாங்கள் பல பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம். அரசாங்கத்தின் முதன்மையான கவனம் நாட்டை முன்னோக்கி வழிநடத்துவது மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பதாகும், மேலும் நாங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு உழைக்க வேண்டும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, புதிய உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவது மற்றும் ஏற்றுமதி செயல்முறையை வலுப்படுத்துவது புதிய அமைச்சரவையின் நோக்கமாகும். இதில் நெடுஞ்சாலைத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எத்தனை சவால்கள் வந்தாலும் வளர்ச்சியையும் முதலீட்டையும் கைவிட முடியாது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்" என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :