உலக சுகாதார தினம் இன்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது.
நமது ஆரோக்கியத்தைப் பேணுவோம் எனும் தலைப்பில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் லங்கா ஹொஸ்பிடல் சுகாதார பாதுகாப்பு முகாமைத்துவ நிபுணரும் , மருத்துவ சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி டாக்டர் டபிள்யு.கரண்டகொட கலந்து கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் செயலமர்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் வைத்தியர்கள் , தாதி உத்தியோஸ்தர்கள் , வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு ஞாபகார்த்தமாக வைத்தியசாலை வளாகத்தில் பிரதம அதிதி அவர்களால் மாமரக் கன்டொன்றும் நடப்பட்டது.
0 comments :
Post a Comment