சமாதான ஊடக அமைப்பினால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அறிவிப்பாளர்கள் மூவருக்கு ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஞாபகார்த்த ஊடக விருது




எம்.எம்.ஜெஸ்மின்-
ஸ்ரீலங்கா சமாதான கற்கை நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச கல்விச்சுற்றுலா ஆய்வு மகாநாடு கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாளக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது இலங்கை சமாதான ஊடக அமைப்பினால் இலங்கை ரூபவாஹினி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எம்.எஸ்.எம்.இர்பான் , இலங்கை ரூபவாஹினி செய்தி வாசிப்பாளர் இர்ஸாத் ஏ காதர் , பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையும் ஆகியோருக்கு காலஞ்சென்ற அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் ஞாபகார்த்தமாக இலங்கை சமாதான ஊடக அமைப்பின் தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் தலைமையில் ஊடக விருது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமாதான ஊடக அமைப்பின் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் , சமாதான ஊடக அமைப்பின் தவிசாளர் சமீர் யுனூஸ் , முன்னாள் அமைச்சர் அலிசாக்கிர் மௌலானா , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.முஸர்ரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :