உயர்தர தேயிலைகளை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் தயாரிக்கப்பட்ட தேயிலைத் தூள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் ஏப்ரல் இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் டஸ்ட் இலக்கம் 1 தர தேயிலை தூள் 1550 ரூபாய் விலையைப் பெற்று சாதனை படைத்தது. இந்த தேயிலை எம்.எஸ்.இம்பெரியல்,எம்.எஸ்.போப்ஸ் மற்றும் வோக்கர் ஆகிய தனியார் ஏற்றுமதி நிறுவனங்களால் வாங்கப்பட்டது. கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் மிகவும் தரமான தேயிலை தூள் வகைகளான டீபியோபி, பியோபிஎப், பியோபிஎப் எஸ்பி, மற்றும் டஸ்ட் இலக்கம் 1 ஆகியன சிறந்த விலைகளைப் பெற்றுள்ளது. தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்டம், தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு காரணமாக அதன் முகாமையாளர் சரத் ரணவீர விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேயிலை விலையில் சாதனை

0 comments :
Post a Comment