நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் இன்னும் இரண்டொரு நாட்களில் மிகத் தீவிரமடையலாம் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி அச்சம் வெளியிட்டுள்ளார்.
ஆட்சியாளர்களையும் அமைச்சர்களையும் அவர்களின் உறவுகளையும் தேடித் தேடி முற்றுகையிடுகின்ற மக்கள் போராட்டமானது "அரபு வசந்தம் " போன்று விகாரமடைந்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.
இத்தருணத்தில் போராட்டத்தை நடாத்தும் மக்களின் நோக்கங்களை அறிந்து முப்படையினரும் பொலிஸாரும் அவர்களது நியாயமான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவது சாலச்சிறந்ததாகும் என எதிர்பார்க்கின்றேன்.
69 இலட்சம் வாக்குகள் அளிக்கப் பட்டிருந்தாலும் தற்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தாம் தெரிவு செய்த அதே ஜனாதிபதி மீதே மிகப்பெரும் அதிருப்தியுடன் இருக்கின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
எனவே ஜனாதிபதியும், பிரதமரும் இடைக்கால அரசையோ தேசிய அரசையோ அமைக்கும் எண்ணங்களை கைவிட்டு பதவி துறந்து தேர்தலுக்கு செல்வதே மக்கள் போராட்டத்தை நிறுத்த சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment