2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான 2 நிமிடம் பிரார்த்தனையுடனான விளக்கேற்றல் நிகழ்வு நேசன் லீடர் பவுண்டேசன் தலைவர் கிசாந்தன் தலைமையில் வியாழக்கிழமை(21) மாலை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் கல்முனை ஆர்.கே.எம் பாடசாலைக்கு அருகில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் இதில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நண்பர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.
இத்தாக்குதலில் இறந்தவர்களில் நினைவாகவும் உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் இங்கு கருத்துரை நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment