மன்னராட்சி மகுடத்தை தன் திறமையால் மாற்றியமைத்த ஜோன் மில்டனின் படைப்புக்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அறிமுகம்.(Updated News )


சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
17ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் ஜோன் மில்டன் இங்கிலாந்தின் இலக்கிய அரங்கில் மாபெரும் புரட்சியாளர். அவர் ஒரு ஆக்கபூர்வமான தத்துவஞானி, ஒரு எழுச்சியூட்டும் சிந்தனையாளர் வரலாற்று ஆசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர், விவாதவாதி மற்றும் மன்னராட்சிக்கு எதிராகவும் ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் வாழ்ந்த சிறந்த நாவலாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

 ஜோன் மில்டன் பற்றியும், அவர் எழுதிய பல்வேறு படைப்புகள் பற்றியும் ஓர் அறிமுக நிகழ்வு நூலகர் எம்.எம் ரிபாயுதீன் தலைமையில் 21.03.2022 இல் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜோன் மில்டனின் ஆக்கங்கள், அவர் படைப்புகள், கவிதைகள், உரைநடை இலக்கியங்கள் அவரது நூல்கள் மற்றும் அவர் தொடர்பான இதர ஆக்கங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.

அத்துடன் ஜோன் மில்டன் பற்றியதான ஓர் விரிவுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதான நூலகத்தில் நூலக பயிலுனராக பயிற்சி பெறும் மொழித்துறையில் சிறப்பு மும்மொழிக் கற்கையை கற்றுக்கொண்டிருக்கும் மாணவி எச்.அகீலா வினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட ஆங்கில மொழி விரிவுரையாளர் மற்றும் அத் துறையின் தலைவர் ஏ.எம்.எம். நவாஸ்  கலந்து கொண்டார். அவர் தனது உரையில் 'ஜோன் மில்டன்' பற்றிய அறிமுகம் அவரின் படைப்புகளில் முக்கியத்துவம், அவரின் படைப்புகளில் தேவைகள், இலக்கியங்களின் முக்கியத்துவம், இலக்கியத்தை மாணவர்கள் கற்க வேண்டும் என்றும் மாணவர்களின் தொழிற்பயிற்சிக்கு இவ்வாறான நிகழ்வுகள் முக்கியம் எனவும் கருத்துரைத்தார்.

இது 08.03.2022 இல் இடம்பெற்ற புத்தக கண்காட்சியின் நான்காவது தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :