நிந்தவூர் பிரதான வீதியில் எரிபொருள் பவுசர் ஒன்றுடன் ஆட்டோ ஒன்று விபத்து - சிறுமி உட்பட நால்வர் பலத்த காயம் !!



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் திங்கட்கிழமை இரவு எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றுடன் ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. இச்சம்பவம் இன்று இரவு 10.20 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றில் இருந்து சம்மாந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த சாய்ந்தமருது பெற்றோல் முகவர் நிலைய அதிபர் ஒருவருக்கு சொந்தமான எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதன்போது ஆட்டோ பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளதுடன், ஆட்டோவில் பயணித்த சிறுமி உட்பட நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :