கல்முனையில் வீட்டுத் தோட்ட மர கன்றுகள் வழங்கி வைப்பு ..!


எம்.என். எம். அப்ராஸ்,சர்ஜுன் லாபிர்-
பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்து உள்ளூர் உணவு உற்பத்தியை உயர்த்துவதற்காக வீடுகளின் மட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பைப் பெற்று தேசிய கொள்கை அமுல்படுத்தி, நஞ்சற்ற போஷணையான சிறந்த புதிய மரக்கறிகள், பழவகைகள், கீரை வகைகள். கிழங்கு வகைகள் உள்ளிட்ட பயிர்களைத் தத்தமது வீட்டுத்தோட்டத்திலிருந்தே பெற்று. தமது நுகர்வுத் தேவையைப் பூர்த்திசெய்து வீட்டுக்கூறுகளில் நாளாந்தச் செலவுகளைக் குறைத்து. மேலதிக வருமானத்தையும் பெற்று, நோயற்ற சுயபோஷணையான குடும்பமாக இருத்தல் என்னும் கருதுகோளைப் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், "பசுமையான தேசம்" தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைப் புரட்சி - 2022 தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது

இதனடிப்படயில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய பிரிவில் தெரிவு செய்யப் பட்ட சமூர்த்தி உதவி பெறும் மற்றும் சமுர்த்தி உதவி பெற தகுதியான குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்ட மர கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய முகாமையாளர் மோசஸ் புவிராஜ் தலைமையில் கல்முனைக்குடி 13,14ஆம் பிரிவு கிராம சேவகர் பிரிவில் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஒருன்கினைப்பில் இன்று (28) இடம்பெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டு வீட்டுத்தோட்ட மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு வழன்கி வைத்தார்.


மேலும் இதன் போது கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா,சமுர்த்தி வலய உதவியாளர் ஐ.எல்.அர்சதீன் சமூர்த்தி உத்தி யோகத்தர்கள் பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம். எஸ் சித்தி நிஹாரா,எம்.டி சகிலா பர்வின்,என்.எல். ரிசானா,கலாச்சார உத்தியோகத்தர் எ.எ.அப்துல் அசீம் மற்றும் பிரிவு மட்ட தலைவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :