முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் , அறிவிப்பாளருமான புர்கான் பீ இப்திகார் தெரிவு



றம்ஸீன் முஹம்மட்-
முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மகாநாடு நேற்று கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொதுஜன ஊடகத்துநை அமைச்சர் டளஸ் அழகப்பெருமா கலந்து கொண்டு முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடகவியலாளர் விபரக் கொத்தை வெளியீட்டு வைத்தார்.
25 வருட வெள்ளிவிழா ஆண்டில் முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் , அறிவிப்பாளருமான புர்கான பீ இப்திகார் தெரிவு செய்யப்பட்டு முஸ்லிம் மீடியா போரத்தின் வரலாற்றில் பெண்ணொருவர் தலைவைராக தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுப் பதிவொன்றை ஏற்படுத்தியுள்ளார்.

செயலாளராக பிஸ்ரின் முஹம்மத் அவர்களும் , பொருளாளராக சிஹார் அனீஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்விற்கு வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :