17ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் ஜோன் மில்டன் இங்கிலாந்தின் இலக்கிய அரங்கில் மாபெரும் புரட்சியாளர். அவர் ஒரு ஆக்கபூர்வமான தத்துவஞானி, ஒரு எழுச்சியூட்டும் சிந்தனையாளர் வரலாற்று ஆசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர், விவாதவாதி மற்றும் மன்னராட்சிக்கு எதிராகவும் ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் வாழ்ந்த சிறந்த நாவலாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
அந்நிகழ்வில் ஜோன் மில்டன் பற்றியும், அவர் எழுதிய பல்வேறு படைப்புகள் பற்றியும் ஓர் அறிமுக நிகழ்வு நூலகர் எம்.எம் ரிபாயுதீன் தலைமையில் 21.03.2022 இல் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஜோன் மில்டனின் ஆக்கங்கள், அவர் படைப்புகள், கவிதைகள், உரைநடை இலக்கியங்கள் அவரது நூல்கள் மற்றும் அவர் தொடர்பான இதர ஆக்கங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன் ஜோன் மில்டன் பற்றியதான ஓர் விரிவுரை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதான நூலகத்தில் நூலக பயிலுனராக பயிற்சி பெறும் மொழித்துறையில் சிறப்பு மும்மொழிக் கற்கையை கற்றுக்கொண்டிருக்கும் மாணவி எச்.அகீலா வினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட ஆங்கில மொழி விரிவுரையாளர் மற்றும் அத் துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் 'ஜோன் மில்டன்' பற்றிய அறிமுகம் அவரின் படைப்புகளில் முக்கியத்துவம், அவரின் படைப்புகளில் தேவைகள், இலக்கியங்களின் முக்கியத்துவம், இலக்கியத்தை மாணவர்கள் கற்க வேண்டும் என்றும் மாணவர்களின் தொழிற்பயிற்சிக்கு இவ்வாறான நிகழ்வுகள் முக்கியம் எனவும் கருத்துரைத்தார்
இந்நிகழ்வு 08.03.2022 இல் இடம்பெற்ற புத்தக கண்காட்சியின் நான்காவது தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment