வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தையொட்டி அம்மனுக்கு தாலிக்கு பொன் உருக்குதல் நிகழ்வு கடந்த பௌர்ணமி தினம் நடைபெற்றது.
ஆலயத்தில் இந்த பொன் உருக்கும் நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் ஏற்பாட்டில் பாண்டிருப்பு ஆச்சாரிமார் யசாந்தன் , ஜெகன் ,நேமிநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
தாலிக்கு பொன் உருக்குதல் நிகழ்வில் தலைவர் கி.ஜெயசிறில் சங்கல்பத்தில் இருக்க நிர்வாக சபையினரும் பக்தகோடிகளும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, அன்று பிற்பகல் 3 மணியளவில் கும்பாபிஷேகத்துக்கான ஆலய பரிபாலன சபை கூட்டம் நடைபெற்றது .
0 comments :
Post a Comment