இனங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய தனி நபர் சைக்கிளோட்டம்



அப்துல் பாஸித்-
நாட்டிலுள்ள இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை வ‌லியுறுத்தி நாடு முழுவ‌தும் த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிள் சவாரியை பொத்துவிலை சேர்ந்த‌ சுல்பிகார் கொழும்பு சுத‌ந்திர‌ ச‌துக்க‌த்திலிருந்து ஆர‌ம்பிக்கும் நிக‌ழ்வு ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌த்துட‌ன் ஆர‌ம்ப‌மான‌து.

இந்த‌ சைக்கிள் சவாரி கொழும்பிலிருந்து யாழ்ப்பாண‌ம், கிளிநொச்சி, திருகோண‌ம‌லை, க‌ல்முனை, பொத்துவில், ஹ‌ம்பாந்தோட்டை ஊடாக‌ கொழும்பை வ‌ந்த‌டையும்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜே.ஜே.பெளண்டேசன் தலைவர் டாக்டர் எம்.வை.எம்.அனீப் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பதிதிகளாக ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌வுன்சில் த‌லைவ‌ர் மெளலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத், க‌விஞ‌ர் பொத்துவில் அஸ்மின், வ‌ச‌ந்த‌ம் தொலைக்காட்சி சிரேஷ்ட‌ ஊட‌க‌விய‌லாள‌ர் எம்.எஸ்.எம் இர்பான், பொத்துவில் பிர‌தேச‌ ச‌பை உறுப்பின‌ர் அப்துல் ம‌ஜீத், அறுகம்பே உல்லாச‌ ப‌ய‌ண‌த்துறை த‌லைவ‌ர் ஏ.எம்.ஜஃப‌ர் உட்ப‌ட‌ ப‌லரும் க‌ல‌ந்து சிற‌ப்பித்த‌ன‌ர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :