Hysterectomy- கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை(வீடியோ)

ருப்பையை அகற்றும் சத்திரசிகிச்சை பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படுகிறது.
கருப்பையை தனியாகவோ அல்லது சூலகங்களுடன் சேர்த்தோ அகற்றுவது செய்யும் அடிப்படை காரணத்தைப் பொறுத்து வேறுபடும். பொதுவாக கருப்பையை அகற்றும் சத்திரசிகிச்சை மருந்துகளுக்கு கட்டுப்படாத நோய்களுக்கு அல்லது புற்றுநோய்களுக்கு செய்யப்படும்
பொதுவான காரணங்கள்
1. அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப்படாத நிலைமையில்
2. பெரிய பல கருப்பைக்கட்டிகள் - Fibroids -
3. கருப்பை, கருப்பை கழுத்து அல்லது சூலக புற்றுநோய்
4. கருப்பை பெண்ணுருப்பு வழியாக இறங்குதல் / Prolapse
5. கடுமையான எண்டோமெட்ரியோசிஸ்
….
கருப்பையை அகற்ற பல அறுவைச்சிகிச்சை முறைகள் உள்ளன
1. வழக்கமான திறந்த அறுவை சிகிச்சை Abdominal Hysterectomy - அறுவை சிகிச்சை செய்ய வயிற்றின் கீழ் பகுதியில் குறுக்காக அல்லது மேலிருந்து கீழாக வெட்டி செய்யப்படும்
2. யோனி வழியாக கருப்பையை நீக்குதல் Vaginal Hysterectomy - குறிப்பாக கருப்பை சுருங்கும் போது கருப்பை யோனி வழியாக அகற்றப்படுகிறது.
3. லேப்ராஸ்கோபிக் கருப்பை நீக்கம் / Laparoscopic Hysterectomy- வயிற்றில் செய்யப்பட்ட சிறிய வெட்டுக்கள் மூலம் செய்யப்படுன். முதலில் வயிறு வாயுவால் நிரப்பப்படும்CO2). கேமரா மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் 5mm/10mm துளைகள் வழியாக செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு யோனி வழியாக கருப்பை அகற்றப்படுகிறது.
4. ரோபோடிக் கருப்பை நீக்கம்
ஒவ்வொரு அறுவை சிகிச்சை நுட்பமும் அதன் நன்மைகளைக் கொண்டுள்ளது.
இருப்பினும், திறந்த அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையானது குறைந்தபட்ச அணுகல் முறையாக இருப்பதால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது
1.குறைந்த வலி
2. சிறிய வெட்டு- 1 செமீ / 0.5செமீ வெட்டு - Cosmetic தழும்புகள் குறைவு
3. குறைந்தபட்ச நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவை
4. குறைவான இரத்தப்போக்கு
5. அறுவைசிகிச்சை நிபுணர் முழு வயிறு மற்றும் உறுப்புகளின் தெளிவான பெரிதாக்கப்பட்ட விபரங்களை பார்க்க முடியுமாக இருப்பதால் ஏனைய உருப்பகளில் காயங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் குறைவு
6. காயத்தில் தொற்று ஏற்படும் சந்தர்ப்பம் குறைவு
பெரும்பாலான பெண்நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் லேப்ராஸ்கோபி மூலம் செய்யப்படலாம், மேலும் இது கருப்பை உட்சுவரில் ஏற்படும் புற்றுநோய் Endometrial Cancer, எண்டோமெட் ரியோஸிஸ் Endometriosis போன்ற நோய்களுக்கு மிகவும் சிறந்த (Gold standard)
தரமான சிகிச்சையாகும்.
Dr A C Mohammed Musthaq
MBBS MD MRCOG MSLCOG
விசேட வைத்திய நிபுணர் - மகப்பேறு மற்றும் பெண்நோயியல்
கண்டி தேசிய வைத்தியசாலை
அறுவை சிகிச்சை வீடியோ (உணர்திறன் உள்ளடக்கம் - நெகிழ்ச்சியான மனமுள்ளவர்கள் பார்க்க வேண்டாம் )
அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் உள்ள 50 வயது நோயாளியில் மருந்துகளுக்கு பதிலளிக்காத போது சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை சிசேரியன் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தது.
கருப்பை , சூலகங்கள் லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றப்பட்டது.
Link -
https://youtu.be/GPTU1RKlCQE
Surgeon - Dr A C M Musthaq
Assistant - Dr N Abeysekara




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :