நிந்தவுர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களின் முயற்சியால் நிந்தவூர் நெல்லித்தீவு அல் ஹிக்மா பாலர் பாடசாலைக்கு சகல வசதிகளும் கொண்ட கட்டிடத் தொகுதி
நிந்தவூர், நெல்லித்தீவு பிரதேசத்தில் அல் ஹிக்மா என்னும் பெயரைத்தாங்கியதாய் 1998 ஆம் ஆண்டு இரண்டு ஆசிரியைகளைக் கொண்டு மெளலவி ஏ.ஸி.அஷ்ரப் அவர்களால் இப் பாலர் பாடசாலை உருவாக்கப்பட்டது
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நிரந்தரமான கட்டிடம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏதுமின்றி பாடசாலையை அண்டிய வீடுகளில் தனது தேவைகளை நிறைவு செய்து வந்தது.
இன்று தனக்கென ஒரு நிரந்தர இடத்தை, சகலவிதமான வசதி வாய்ப்புகளையும் கொண்டதாய் நெல்லித்தீவு பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment