இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தின் ருத்ரோபன தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மர நடுகை நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் (1) இடம் பெற்றது.
றஹுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் ஏ.சி.ஏ.பரீட் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மரக் கன்றை நட்டி வைத்தார்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.பாஹிமா.உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜிப்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.சமீமா,சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.உவைஸ்,சமுர்த்தி முகாமையாளர்,கரையோரம் பேணல் திட்ட உதவிப் பணிப்பாளர்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,விளையாட்டு சங்க உறுப்பினர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்டோ இதில் கல்நது கொண்டு கடற் கரையோரத்தில் மரக் கன்றுகளை நட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment