மூதூர் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா வருகிற மே மாதம் 2022 இல் கொண்டாடப்படவிருக்கின்றது.
அந்த விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு அதற்கான ஞாபகார்த்த முத்திரையும் வெளியிடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதன் முதற்கட்டமாக இன்று(11)மாலை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்தௌபீக் அஞ்சல் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன அவர்களை சந்தித்து கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டஅஞ்சல் மா அதிபர் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment