தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் முதல் இடம்பெற்று வரும் நிலையில் மூன்றாவது தினமான நேற்று இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 642 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா; பல்கலைக்கழக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம்.மஸாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
பட்டமளிப்பு விழாவின் நான்காம் அமர்வில் 329 மாணவர்களும் ஐந்தாம் அமர்வில் 313 மாணவர்களும் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
2013/2014 ஆண்டின் சிறந்த மாணவருக்கான எம்.எச்.அப்துல் காதர் ஆலீம் ஞாபாகார்த்த விருதினை சமியூன் சஹ்றா பேகமும் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி ஞாபாகார்த்த விருதினை முகம்மட் அலியார் பேபி சஹிலாவும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் 2014/2015 ஆம் ஆண்டின் சிறந்த மாணவருக்கான எம்.எச்.அப்துல் காதர் ஆலீம் ஞாபாகார்த்த விருதினை முகம்மட் செயினுலாப்தீன் சுனூமியும், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி ஞாபாகார்த்த விருதினை முகம்மது இப்றாஹிம் நஸ்ரினும் பெற்றுக் கொண்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழாவில்; மாணவர்கள் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களின் கரங்களால் பட்டங்களை பெற்றுக் கொண்டது குறிப்ப்pடத்தக்கது.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப்பட்டமளிப்பு விழா 10 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.
0 comments :
Post a Comment