பாலர் பருவ அபிவிருத்தி தொடர்பிலான NVQ-4 பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு



ஊவா மாகாணத்தின் பாலர் பருவ அபிவிருத்தி தொடர்பிலான NVQ-4 பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு (25 நேற்று) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஊவா மாகாண கல்வி அமைச்சின் மேற்பார்வையில், ஊவா மாகாண பாலர் பருவ அபிவிருத்தி அதிகாரசபையின் வழிகாட்டலின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதி உதவியுடன், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டம் (UNDP) இன் CDLG வேலைத்திட்டத்தின் கீழ், NAITA நிறுவனத்தின் தொழிநுட்ப ஆதரவுடன் நடைபெறவுள்ள இந்த பாடநெறிக்காக, உள்ளூராட்சி நிறுவனங்களால் நடத்தப்படும் பாலர் பாடசாலைகளில் கற்பிக்கும் 38 ஆசிரியர்கள் நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கு NVQ-4 அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல், குழந்தைகளின் திறன்களுடன் ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்தல், ஏனைய நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் போன்ற குறிக்கோளுடன் இப்பயிற்சியை நடத்துவது விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில் பதுளை நகர மேயர் பிரியந்த அமரசிறி, ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி. சந்தியா அபன்வெல உள்ளிட்ட அரச அதிகாரிகள், CDLG/UNDP வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸிஹான் ஸரூக், Zoom தொழிநுட்பத்தின் ஊடாக UNDP அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :