அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுக்களின் பிரதேச இணைப்பாளர்களுக்கான அமர்வு



எம்.என்.எம்.அப்ராஸ்-
சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தின் (PCA) அனுசரணையில் இயங்கி வரும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலக பிரிவில் காணப்படும் 20 பிரதேச நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்கள் மற்றும் 20 பிரதேச பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்களுக்கான ஒன்று அமர்வு அம்பாறையில் (19) நேற்று இடம்பெற்றது .
அம்பாறை மாவட்டத்தில் குறித்த நல்லிணக்க குழுக்களின் மூலம் மேற்கொள்ள வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும்

கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக கேட்றியப்பட்டு எதிர்காலத்தில் மாவட்ட, பிரதேச சமுக மட்டத்தில் மேற்கொள்ளவுள்ள நல்லிணக்க முன்னெடுப்புக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத் தின் தேசிய பணிப்பாளர் ரீ. தயாபரன் ,முகாமையாளர் டி.இரஜந்திரன் , அரச சார்பற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ. எல். எம். இர்பான் , சமாதான சமுக பணி அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான எம்.எல்.ஏ.மாஜீத், கே. டி. ரோகிணி , எச். எஸ். ஹசனி, சுரேகா அத்தநாயக்க , மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இனைப்பாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் மற்றும்

பிரதேச நல்லிணக்க மன்றங்ககள், இளைஞர் நல்லிணக்க மன்றங்ககளின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :