மருதமுனை அல்- மனார் தேசிய பாடசாலைக்கு ஹரீஸ் எம்.பி விஜயம் : பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்விவலய மருதமுனை அல்- மனார் தேசிய பாடசாலைக்கு பாடசாலை அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் இந் அழைப்பின் பேரில் அண்மையில் விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாடசாலையின் குறைநிறைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அதிகாரிகளிடம் அது தொடர்பில் பணிப்புரையும் விடுத்தார்.

இந்த விஜயத்தின் போது கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், கல்முனை வலயக்கல்வி பணிமனையின் கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். அமீர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ பாவா, கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி எம். ஸம் ஸம், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அண்மையில் தேசிய பாடசாலையாக இப்பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளமையினால் இப்பாடசாலையில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அது தொடர்பிலான தீர்மானங்கள் சிலதும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :