காரைதீவு FIRE விளையாட்டுக்கழகம் தைத்திரு நாளை முன்னிட்டு கிரிக்கட் சுற்றுப்போட்டியை நடாத்தியது.
அணிக்கு 7 பேர் கொண்ட 5ஓவர் போட்டியில் 32 அணிகள் பங்கு பற்றன.
கிரிக்கட் சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டியில் பாலமுனை கிரிக்கெட் அணி மற்றும் நிந்தவூர் ரியல் இம்றான் விளையாட்டுக்கழகம் நிந்தவூர் போன்றன மோதின .
இறுதிப்போட்டியில் பாலமுனை விளையாட்டு கழகம் வெற்றியினை தனதாக்கிக்கொண்டது.
சிறந்த துடுப்பாட்ட வீரராக fire அணியின் பி.சுலக்ஷன் ,சிறந்த பந்து வீச்சாளராக fire அணியின் எஸ்.அஜித்குமார், இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக பாலமுனை அணியைச் சேர்ந்த மியாஸ் ,மற்றும் இச் சுற்றுப்போட்டியில் தொடர் ஆட்ட நாயகனாக ரியல் இம்றான் அணியின் நஜாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த சுற்றுப்போட்டியின் முடிவிலான பரிசளிப்புவிழாவில் பிரதம அதிதியாக விபுலானந்த மத்திய கல்லூரியின் அதிபர் ம.சுந்தரராஜன் கலந்து சிறப்பித்தார்..
0 comments :
Post a Comment