கிழக்கு மாகாண உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களுக்கான விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரில் நிந்தவூர் காஷிபி விளையாட்டுக்கழகம் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களை மையப்படுத்திய அணிகளுக்கிடையிலான சுற்றுத்தொடர் பொலனறுவை வெலிகந்த பிரதேசத்தில் றியல் ஸ்டார் உலமாக்கள் அணியினால் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 9 அணிகள் இச் சுற்றுத் தொடரில் பங்குபற்றினர்.
இத்தொடரில் இறுதிப்போட்டிக்கு நிந்தவூர் காஷிபி விளையாட்டுக்கழகம் மற்றும் அக்கரைப்பற்று ஹபீபியா விளையாட்டுக்கழகம் ஆகியன தெரிவாகி இறுதியில் நிந்தவுர் காஷிபி விளையாட்டு கழகம் இவ்வருடத்திற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது . இரண்டாவது இடம் அக்கரைப்பற்று ஹபீபியா விளையாட்டுக்கழகத்திற்கு கிடைத்தது.
இப்போட்டியில் ஆட்டநாயகனாக அல்ஹாபிழ் ரிப்தாஸ் அவர்களும், தொடர் ஆட்டநாயகனாக மௌலவி அஸாம் காஷிபி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
உலமாக்கள் பல்வேறு துறைகளிலும் கால் ஊன்றுவதற்கான செயற்பாடுகளாக இச்சுற்று தொடர் ஒழுங்கமைக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment