முதல் 3 நாட்களில் 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதோடு இதன் மூலமாக 100 இலட்சத்திற்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

அதுகல்புர நுழைவாயிலின் ஊடாக முதல் 3 நாட்களில் 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதோடு இதன் மூலமாக 100 இலட்சத்திற்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது - ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவு) திறந்து வைக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியில் 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதோடு 100 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். .

15-01-2022 சனிக்கிழமை அன்று மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டதையடுத்து, முதல் 12 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 16-01-2022 மதியம் 12.00 மணிக்குப் பிறகு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலையில் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 17-01-2022 திங்கட்கிழமை நள்ளிரவு வரை 23,039 வாகனங்கள் பயணித்துள்ளன. இந்த மூன்று (03) நாட்களில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இந்த தினத்திலே சென்றுள்ளன. அன்றைய தினம் 4,865,500.00 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பிரிவில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாற்று இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :