கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் கல்முனை மாநகர சபை மேயர் அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக மாநகர உறுப்பினர்களுக்கு 2021 பாதீட்டில் மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டின் பிரகாரம் கல்முனை மாநகர சபை ஐந்தாம் வட்டார உறுப்பினர் சிபான் பஹுறுத்தீனின் வேண்டுகோளின் பேரில் 300000/- பெறுமதியான LED மின் குமிழ்கள் பொருத்தப்பட்டன.
இதன் விளைவாக மருதமுனை மக்பூலியா வீதி, ஜாயா வீதி, அல் ஹம்றா வீதி, அல் மினன் வீதி, ஹாஜியார் வீதி, பிரான்ஸ் ஸிடி போன்றவற்றின் சில பகுதிகள் ஒளியூட்டப்பட்டன. இதன்போது கருத்து தெரிவித்த சிபான் பஹுறுதீன் அவர்கள் கல்முனை மாநகர மேயரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதோடு கட்சி பேதமற்ற அவருடைய நடவடிக்கைக்காக பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என்பதோடு புரிந்துணர்வுடனான அரசியல் நடவடிக்கைக்கு இது உந்து சக்தியாக அமைவதாகவும் தெரிவித்தார் .
0 comments :
Post a Comment