அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை முழு உலகமே தற்போது எதிர்கொண்டுள்ளது இதில் இலங்கை மாத்திரம் விதி விலக்கல்ல. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு நிவாரன அடிப்படையில் வழங்க அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை சதொச விற்பனை நிலையத்தில் ஊடாக அரிசி, பருப்பு உள்ளிட்ட 50 பிரதான அத்தியாவசிய பொருட்கள் நிவாரன விலைக்கமைய விற்பனை செய்யப்படும் எல வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன. தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சர்வதேச சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதுடன், கப்பல் விநியோக சேவைக்கான கட்டணங்களும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் இலங்கைக்கு மாத்திரம் விதிவிலக்கல்ல. முழு உலகமும் அப்பிரச்சினைய எதிர்க் நோக்கிக் கொண்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை மக்கள் மீது முழுமையாக சுமத்தாமல் நிவாரண விலையின் அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்ய அரசாங்கம் பல திட்டங்களை இதுவரையில் செயற்படுத்தியுள்ளது. சதொச விற்பனை நிலையங்களில் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் நிவாரன விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் இவ்வருடம் நிறைவு பெறும் வரை தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரன விலைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ கிராம் நாடு அரிசி 99ரூபா 50 சதத்துக்கும், சம்பா அரிசி ஒரு கிலோ 130 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும். எந்தவோர் அரிசியினையும் ஒருவர் 5 கிலோ வரை பெற்றுக் கொள்ள முடியும்.
சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபாவிற்க்கும், பருப்பு ஒரு கிலோகிராம் 240 ரூபாவிற்க்கும் நூடில்ஸ் ஒரு பொதி 125 ரூபாவிற்க்கும் அத்தோடு 50 பிரதான அத்தியாவசிய பொருட்களையும் சந்தை விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம்.
டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது அவசியம் என எதிர்த் தரப்பினர் தொடர்ந்து குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் அங்கு முன் வைக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடி பணிய நேரிடும். நிபந்தனைகளுக்கு அடி பணிய நேரிடும் போது நாட்டில் அரசியல் ரீதியிலும், அரச நிர்வாகத்திலும் பாரிய பிரச்சினை தோற்றம் பெறும். அவை குறித்து எதிர்த்தரப்பினர் மக்கள் மத்தியில் கருத்துரைப்பதில்லை. நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்:
0 comments :
Post a Comment