உலக எய்ட்ஸ் தினம் கல்முனையில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடா வருடம் மார்கழி மாதம் முதலாம் திகதி உலக எயிட்ஸ்தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படுகிறது.
இந் நிகழ்வானது கல்முனை பிராந்திய சுகாதார சேவை பனிமனை மற்றும் கல்முனை
ஆதாரவைத்தியசாலையுடன் இணைந்து கல்முனை ஆதாரவைத்தியசாலையின் கேட்போர்
கூடத்தில் கொவிட் சுகாதார கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு அமைவான முறையில் நேற்று
நடாத்தப்பட்டது.
இவ் ஆண்டின் தொனிப்போருளாக 'சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வருதல் எயிட்ஸ் இனை தடுத்தல்
மற்றும் பிராந்திய ரீதியான தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வருதல் என்பதாகும்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வானது கல்முனை வடக்கு
ஆதாரவைத்தியசயலையின் வைத்திய அத்தியட்சகர ; வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளிஸ்வரன்; தலைமையில்
இடம்பெற்றதோடு; தொடர்ந்து பிராந்திய சுகாதார சேவைபணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குண.சுகுணன்; இந்நோய் சம்பந்தமாக மக்களுக்கான விழிப்புணர்வுகள் மற்றும் இந்நோயை கடடுப்படுத்துவதற்குரிய வழிமுறைகள் மற்றும ; முன்னெடுப்புகள் சம்பந்தமான உரை ஒன்றை வழங்கினாhர்.
இதனைத் தொடர்ந்து பாலியல் தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட வைத்திய நிபுணர்
டாக்டர் விஜேசேகரவின் ; விழிப்புணர்வு உரையில் இந் நோய் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்துவதுடன் மக்கள ; தாமாகவே முன் வந்து பரிசோதனைகளும் வைத்திய ஆலோசனைகளையும்
பெற்றுக்கொள்வதுடன் இது சம்மந்தப்பட்ட சுகாதகர பணிப்பாளர்களின் பங்களிப்பு பற்றியும் உரை
ஆற்றினார்.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவை பணிமனை மற்றும ; கல்முனை வடக்கு ஆதாரவைத்திசாலையின்
உத்தியோகத்தர்களும ; ஊழியர்களும் பங்குபற்றியதோடு இராணுவமுகாமின் பிரதிநிதிகளும் கலந்து
கொண்டார்கள்.
மேலும் , இந் நிகழ்வினை கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் சுகாதார கல்விபபிர்வு பொறுப்பு
வைத்திய அதிகார் டாக்டர் சோ.திருமால் தொகுத்து வழங்கியோதோடு இந்நிகழ்வானது பாலியல்
தொற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் .டில்ஷானின் நன்றி உரைஇடம்பெற்றது.
0 comments :
Post a Comment