அமைச்சர் நிமால லான்சாவுடன் உறுப்பினர் ராஜன் சந்திப்பு! தீர்ந்தது கல்முனை தமிழர்பிரதேச மைதானப் பிரச்சினை!



வி.ரி.சகாதேவராஜா-
கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிமால் லான்சாவுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நடாத்திய சந்திப்பையடுத்து கல்முனை தமிழர் பிரதேச மைதானப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டது.

மாத்தளை மாநகர மேயர் சந்தனம் பிரகாஸ் சகிதம், கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கல்முனை தமிழ்ப்பிரிவிலுள்ள மைதானத்தை கபளீகரம் செய்யும் நோக்கில் மைதானத்திற்கு குறுக்காக கார்ப்பட் வீதியமைக்க முயற்சி செய்வதையும் அதனால் ஏற்படும் விபரீதங்களையும் உறுப்பினர் ராஜன் அமைச்சரிடம் பூரணமாக விளக்கமளித்தார்.

அதனையடுத்து மைதானத்திற்கு கிழக்கு புறமாக மைதானத்திற்கு எவ்வித பாதிப்புமின்றி குறித்த கார்ப்பட் வீதி அமைக்கப்படும் என்று அமைச்சர் நிமால் லான்சா கூறியதோடு இதுவிடயத்தை உடனடியாக அங்கிருநதவாறே தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எ.எல்.எம்.அலியாருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் மைதானப்பிரச்சினையும் தீர்த்துவைக்கப்பட்டது.

மைதானப்பிரச்சினை பற்றி தெரியவருவதாவது:
கல்முனை தொடக்கம் மருதமுனை வரை கடலோரமாக கார்ப்பட்வீதியமைக்கும்போது கல்முனை தமிழ்ப்பிரதேசத்தில் உள்ள ஒரேயொரு விளையாட்டுமைதானத்திற்கு குறுக்காக வீதியமையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முதல்கட்டவேலைகளும் நடைபெற்றுவருகின்றவேளையில் பொதுமக்களின் எதிர்ப்பலை தொடங்கியிருந்தது.
மைதானத்திற்கு பாதிப்பில்லாதவகையில் மைதானத்திற்கு கிழக்காக வீதியை அமைக்குமாறு பொதுநல அமைப்புகள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், சைனிங் விளையாட்டுக்கழக்கத்தினர் ,பொதுமக்கள் என பலதரப்பினரும் வேண்டுகோள்விடுத்து எதிர்ப்பை பலகூட்டங்களிலும் தெரிவித்திருந்தனர்.

.இறுதியாக வீதிஅபிவிருத்தி அதிகாரசபை உயரதிகாரிகள் கடந்தவாரம் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ,சைனிங் விளையாட்டுக்கழகத்தினர்பொதுமக்களெல்லாம் சேர்ந்து மைதானத்தில் ஒரு சந்திப்பை நடாத்தியிருந்தனர்.

அங்கு மக்கள் 'மைதானத்திற்கு குறுக்காக வீதி என்றால் எமக்கு வீதி தேவையில்லை. மைதானத்தை தவிர்த்து போடுவதானால்போடுங்கள்.' என்று தமது குரலை எழுப்பினர்.
எனினும் வீ.அ.அ.சபையினர் தமது பிடியில் விடாப்பிடியாக இருந்தகாரணத்தினால் அந்தப்பகுதியில் மாத்திரம் தற்சமயம் வீதியமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டடிருந்தது.
கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் இதுவிடயம் பற்றிக்கூறுகையில்:
கல்முனை 1ஆம் 2ஆம் 3ஆம் பிரிவுகளுக்கான ஒரேயொரு விளையாட்டுமைதானம் இது. சுனாமிக்கு முன்னர் கல்முனை மாமாங்க வித்தியாலயமும் அதன் மைதானமும் அமைந்திருந்த பிரதேசம் இது.கடற்கரையருகே அமைந்திருந்த காரணத்தினால் சுனாமியினால் பாடசாலை முற்றாக சேதமடைந்து பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட்டு பாடசாலை இயங்கிவருகிறது. பாதிக்கப்பட்ட மைதானத்தை, சைனிங் விளையாட்டுக்கழகத்தினர் பொறுப்பெடுத்து புனரமைத்து இன்று இளைஞர்கள் பொழுதுபோக்கிற்கு விளையாடும் களமாகவுள்ளது.இதனை வீதிக்காக விட்டுக்கொடுக்கமுடியாது.இளைஞர்கள் விளையாடாமல் போதைவஸ்துவிற்கு அடிமையாகிமுழுச்சமுகமும் குட்டிச்சுவராகவேண்டும் என்று எண்ணுகிறார்கள் போல. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

இன்றையஇளைஞர்களினதும் நாளையசந்ததியினரின தும் பழிச்சொல்லை இவ்வட்டாரப்பிரதிநிதி என்றவகையில் நான் சுமக்கவேண்டிவரும்.வீதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை இருக்கின்ற ஒரேயொரு மைதானத்தை ஒருபோதும் இழக்கமுடியாது.அதற்காகவே கொழும்பு சென்று அமைச்சர் நிமால் லான்சாவுடன் மாத்தளைமேயருடாக சந்திப்பை ஏற்படுத்தி வெற்றிகாணப்பட்டது.என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :