தெரிவு செய்யப்பட்ட 247 பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் (21) இடம்பெற்றது.
நிகழ்வில் விதாதா வள நிலையத்தினால் கிராம சேவகர் பிரிவில் ஒரு முயற்சியாளரை உருவாக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 19 பயனாளிகளுக்கு சுமார் 16 இலட்ச ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 228 பயனாளிகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணத் தொகுதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதேச திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம். ஹன்சுல் சிஹானா உட்பட விதாதா வள நிலையத்தின் அதிகாரிகள், சமுர்த்தித் திணைக்களத்தின் அலுவலர்கள் பனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment