அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட கூட்டம்.



றாசிக் நபாயிஸ்-
கொரோனா பரவல் காரணமாக நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்து வந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட கூட்டம் இன்று 25ஆம் திகதி 10மணிக்கு சம்மேளனத்தின்
தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் தலைமையில் மருதமுனை அல்-ஹிக்மா ஜுனியர் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுகவீனமுற்று இருக்கின்ற சம்மேளனத்தின்
முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் அவர்களின் சுகநலன் வேண்டி துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது.
இத்துஆப் பிராத்தனையை மருதமுனை மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.ஜெரிஸ் ஹாபீஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இக்கூட்டத்தில் சம்மேளனத்தின் கடந்த கால முன்னேற்ற விடயங்கள், 2022ஆம் ஆண்டுக்கான சம்மேளனத்தின் நடவடிக்கைகள், உறுப்பினர்களின் நலன்புரி விடயங்கள் பற்றிம் ஆராயப்பட்டது.

இதன் போது சம்மேளனத்தின் தலைவர் அவர்கள் உரையாற்றும் போது சம்மேளனத்தின் முன்னாள் தலைவருக்கு தங்களின் தனிப்பட்ட பிரார்த்தனைகளைச் செய்வதுடன் அனைத்து
உறுப்பினர்களும் இந்த சம்மேளனத்தை சிறப்பாக கொண்டு செல்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன், எதிர்காலத்தில் இச்சம்மேளனத்தை ஒரு வலுவான சம்மேளனமாக கொண்டு செல்வதற்கு உறுதிபூண வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.

இதன் போது பிரதான வீதியில் இயங்கி வரும் 'Warranty Mobile Show Room' நிறுவனத்தின் உரிமையாளர் ஹஸன் அவர்களால் ஊடகவியலாளர்களுக்கு 'Pocket Calendar' அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதன் போது சம்மேளனத்தின் செயலாளர் ஏ.ஜே.எம்.ஹனிபா, பொருளாளர் யூ.எம்.இஷ்ஹாக், சம்மேளனத்தின் ஆலோசனைகளின் ஒருவரான எம்.எல்.எம்.ஜமால்டீன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :