மாமன் மருமகன் காணி தகராரு மாமன் மரணனம்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
ட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு வயல் பிரதேசத்தில் தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில் தாய் மாமன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (21.12.2021) இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில் உள்ள வயல் காணி தொடர்பாக சகதோரர் ஒருவருக்கும் அவரது சகோதரிக்கும் இடையில் காணி தகராரு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சகோதரியின் மகனுக்கும் தாய் மாமனுக்கும் ஏற்பட்ட தகராரே இந்த கொலைக்கான காரணம் என்று ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்தவரின் தாயாரான சேகு இஸ்மாயில் உம்மு சல்மா என்பவர் தெரிவிக்கையில் நானும் எனது கொலை செய்யப்பட்ட மகனும் வயலுக்கு உரம் எறிவதற்கு வந்த போது வயலக்குள் எனது மகளின் மகன் வேலை செய்து கொண்ருந்தார் அப்போது எனது மகன் ஏன் எனது காணிக்குள் வந்தாய் என்று எனது பேரனிடம் கேட்ட போது அருக்கு அடித்து வெட்டிவிட்டு என்னிடம் உனது மகனை வெட்டியுள்ளேன் கொண்டு போ என்று செர்லிவிட்டு எனது பேரன் போனாhர் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முள்ளிவட்டவான் விவசாய அமைப்பு தலைவர் ஐ.எல்.எம். முஸ்தபா கருத்து தெரிவிக்கையில்.

நானும் என்னுடன் மற்றுமொரு விவசாயியும் முச்சக்கர வண்டியில் வரும் போது உசனார் பௌசான் என்பவர் எனது மாமாவை வெட்டி விட்டேன் அவரை உங்கள் ஆட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார் அவருடன் நானும் என்னுடன் வந்தவர்களும் வந்து பார்த்த போது பௌசான் தெரிவித்தார் அவர் மரணித்து விட்டார் நீங்கள் அம்புளன்ஸ்சுக்கு அறிவியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார்.

மீறாவோடை மாஜ்சோலை பள்ளிவாயில் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகின் தந்தையான அலியார் ஹமீட் (வயது – 38) என்பவர் மரணமடைந்துள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலஸார் விசாரனைகளை மேற்கொண்டு வரகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :