13.12.2021 அன்று மாலை முதல் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் 14.12.2021 அன்று மலையக தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.
16 கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவை ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று மாலை 04 மணி முதல் இன்று நள்ளிரவு வரையில் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் சேவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை தபால் சேவை மற்றும் தொலைத் தொடர்பு ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய புதிய சேவை சட்டமூலமொன்றை ஸ்தாபித்தல், சனிக்கிழமை கொடுப்பனவில் 20 வீதத்தை வழங்குதல், வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற 16 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment