இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா என்றழைக்கப்படும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200 வது கொடியேற்ற விழா அடுத்தவருட ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் எவ்வாறு விழாவை நடத்துவது என்பது தொடர்பிலும், முத்திரை வெளியிடுவது தொடர்பிலும் இன்னும் பல முக்கிய தீர்மானங்களை எடுப்பது தொடர்பிலுமான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (13) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்ஸார், கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா மற்றும் கல்முனை முஹையத்தீன் ஜும்மா பெரியபள்ளிவாசலின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், உலமா சபையினர், கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா மற்றும் கல்முனை முஹையத்தீன் ஜும்மா பெரியபள்ளிவாசலின் நிர்வாக சபையினர், அரச அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு விழா நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
0 comments :
Post a Comment