இறக்காமம் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இம்முறை எவ்வித எதிர்ப்புமின்றி ஏகமனதாக திங்கட்கிழமை (13) நிறைவேற்றப்பட்டது.
இறக்காமம் பிரதேசசபையின் தவிசாளர் எம். எஸ்.ஜெமீல் காரியப்பர்
தலைமையில் இடம்பெற்ற அமர்வில் 13 உறுப்பினர்களில் 11 பேர்
ஏகமனதாக ஆதரவை நல்கியதுடன், இரண்டு உறுப்பினர்
கள் சபையில் பிரசன்னமாயிருக்கவில்லை.
இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் 100 மில்லியன் ரூபா வருமானத்தில் 60 சதவீதமான பணம் முழுக்க முழுக்க மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான உத்தேச வருமானம் சுமார் 100 மில்லியன்
ரூபாவில் 60வீதமான தொகை மக்கள் நலனுக்கு முன்னுரிமை
வழங்கி இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட 08 வட்டாரங்க
ளுக்கும், உள்ளக வீதி,வடிகான் புனரமைப்பு பணிகளுக்கு தலா
ஐந்து இலட்சம் ரூபா வீதமும், பெண்களைத் தலைமைத்துவமாகக்
கொண்ட மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு ஒரு இலட்சத்து
ஐம்பதாயிரம் ரூபாவும்,வீதி விளக்கு பொருத்து
வதற்கு ஒரு மில்லியன் ரூபாவும், கல்வி அபிவிருத்தி, கலாசாரம், வறுமை ஒழிப்புக்கு மூன்று இலட்சம் ரூபாவும், சுயதொழில் ஊக்குவிப்புக்கு இரண்டு இலட்சம் ரூபாவும்,இயற்கை அனர்த்தத்திற்கு இரண்டரை இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment